ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தை ரசிகனுக்கு வழங்குகிறது என்பதை விட முக்கியமானது படம் முடிந்து வீட்டுக்கு போகிறவனுக்கு, அது மூளையிலும் மனதிலும் என்னவாக பதிவாகிறது என்பதும் உள்ளுக்குள் எதை கடத்துகிறது என்பதும்தான். ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு குடும்பங்களை சிதைத்த வடநாட்டு கொள்ளையர்களை தமிழக போலீஸ் வேட்டையாடுகிற கதைதான் தீரன் அதிகாரம் ஒன்று ! நிற்க ! ஒரு குற்றவாளியை கைது செய்ய வந்திருக்கிறோம், விசாரணைக்கு வந்திருக்கிறோம் என்கிற பெயரில் தர்மபுரியில் விழுப்புரத்தில் சத்தியமங்கலம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எல்லாம் கடுமையாக கண்டித்து விட்டு, ராஜஸ்தானில் அதே மாதிரியான தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் கிராமத்தில் தமிழக போலீசார் அரங்கேற்றுகிற வன்முறையை பார்த்து ரசித்துக் கொண்டே, கொல்லுங்க என தியேட்டரில் கத்துகிற இந்த எண்ணத்தை நமக்கு விதைத்து எது ? வில்லன் - தமிழனைக் கொன்ற வடமாநிலத்தான், இரக்கமில்லாதவன், அவனை தமிழன் பழி தீர்க்கிறான் என்கிற அடிப்படையில் பல்லுக்கு பல் - கண்ணுக்கு கண் என்கிற நம்முடைய ஆழ்மன வன்முறை பசிக்கு தீனி போட்டிருக்கிற வகையில் புத்திசாலித்தனமாக இயக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். “ஏங்க போலீசை ஊருக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கிற வன்முறை கிராமத்தில் என்ன செய்ய முடியும் ?” அரசாங்கம் அந்த கிராமத்திற்குள் நுழைய முடியாது ஏனெனில் அந்த கிராமத்தில் இதற்கு முன் சாலைகள் பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் மின்சாரம் குடிநீர் என எதற்காகவும் அரசாங்கங்கள் உள்ளே நுழையவேயில்லை என்பதையே காட்சிகள் காட்டுகின்றன.
John Doe :
John is a Web developer, writer and columnist. When he's not writing about tech stuff he's usually playing football or hanging out with his friends.
email@here.com
Other Articles »
Related Articles
:
No Related Content Found
|